HT Sports Special: டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் லிஸ்ட்

HT Sports Special: டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் லிஸ்ட்

Manigandan K T HT Tamil
Published Jul 11, 2023 06:05 AM IST

ப்ரூக் 47 ரன்கள் எடுத்திருந்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். அது அவருக்கு 10வது டெஸ்ட் ஆட்டம் ஆகும்.

டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்
டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் ஜெயித்தது.

ப்ரூக் 47 ரன்கள் எடுத்திருந்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். அது அவருக்கு 10வது டெஸ்ட் ஆட்டம் ஆகும்.

இதன்மூலம், அவர் நியூசிலாந்து வீரர் காலின் கிராண்ட்ஹோம் சாதனையை தகர்த்தார்.

இந்த சாதனை பட்டியலில் முதல் சில இடங்களில் இருக்கும் வீரர்களின் லிஸ்ட்டை பார்ப்போம். முதலிடத்தில் ஹெர்பர்ட் சட்கிளிஃப் இருக்கிறார்.

அவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். 9 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 1000 ரன்களை கடந்தார்.

அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வீக்ஸ் இருக்கிறஆர். இவரும் 9 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 1000 ரன்களை கடந்தார்.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் லெஜண்ட் பிராட்மேன் 7 டெஸ்ட்களிலேயே இந்தச் சாதனையை எட்டினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஹர்வி 10 ஆட்டங்களில் 1000 ரன்களை கடந்த வீரராக உள்ளார்.

இந்த லிஸ்ட்டில் இந்தியாவைச் சேர்ந்த வினோத் காம்ப்ளி இடம்பெற்றுள்ளார். இவர் 12 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 1000 ரன்களை கடந்தார்.

முன்னதாக, ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்று இருந்த நிலையில், 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து ஜெயித்துள்ளது.

இதன்மூலம், தொடரை கைப்பற்றும் ரேசில் இங்கிலாந்து இணைந்துள்ளது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து, 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி விளையாடியது.

சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 75 ரன்கள் விளாசினார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் பதிவு செய்தார். தொடக்க வீரர் கிராவ்லி 44 ரன்கள் அடித்தார்.

இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம், ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.