Moeen Ali: ஆஷஸ் 2வது டெஸ்டில் மொயீன் அலிக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த இளம் வீரர்!
25 வயதாகும் டங், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த மாதம் தான் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். இவரது பெஸ்ட்டாக 5/66 இருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் அணியில் இடம்பிடித்துள்ளார். 25 வயதாகும் டங், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த மாதம் தான் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். இவரது பெஸ்ட்டாக 5/66 இருந்தது.
டெஸ்டில் ஓய்வை அறிவித்த மொயீன் அலியை, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட வாருங்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த அழைப்பின்பேரில் அவர் இந்தத் தொடரில் விளையாடத் தொடங்கினார்.
யார் இந்த ஜோஷ் டங்?
ஜோஷ் டங், 1997ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்தார். வலது கை ஆட்டக்கார். வலது கையில் வேகப்பந்து வீசும் திறன் படைத்தவர்.
முதல் தர கிரிக்கெட்டில் 48 ஆட்டங்களில் விளையாடி 167 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இளம் வீரரான இவர், இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. இதையடுத்து ஆஸி., அணி 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 273 ரன்களை குவித்தது.
பின்னர் சேஸிங் செய்து 282 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்