Australia: அசத்தல் பவுலிங்.. பணிந்தது இங்கிலாந்து-2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Australia: அசத்தல் பவுலிங்.. பணிந்தது இங்கிலாந்து-2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Australia: அசத்தல் பவுலிங்.. பணிந்தது இங்கிலாந்து-2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Manigandan K T HT Tamil
Jul 02, 2023 10:31 PM IST

ஆஸி., அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களிலும் வென்று அசத்தியிருக்கிறது.

வெற்றி மகிழ்ச்சியில் ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ்
வெற்றி மகிழ்ச்சியில் ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் (AP)

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஓபனிங் பேட்ஸ்மேன் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது.

ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 77, ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டிய ஹெட் 7 ரன்களில் நடையை கட்டினார். பின்னர், கேமரூன் க்ரீன் 18, கேரி 21, ஸ்டார்க் 15, கம்மின்ஸ் 11 என சிறிய பங்களிப்பை அளித்தனர். காயத்தால் அவதிப்பட்ட லயன் பேட்டிங்கில் களமிறங்கி 13 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணி 279 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி 370 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்து பவுலர்களில் ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டங் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 371 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலியா பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுத்தனர். ஓபனிங் பேட்ஸ்மேன் க்ராவ்லி 3, போப் 3, ஜோ ரூட் 18, ஹார் பரூக் 4 என 50 ரன்களுக்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் டாப் ஸ்கோரரான டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 69 ரன்கள் சேர்த்த நிலையில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

டாக்கெட் 50, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பேர்ஸ்டோ மட்டுமே பேட்ஸ்மேனாக உள்ளார். ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 257 ரன்கள் தேவைப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்க வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவையாக இருந்தது.

கடைசி நாளான இன்று 81.3 ஓவர்களில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. அந்த அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஓபனிங் பேட்ஸ்மேன் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 58, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. நிதானமாக பேட் செய்து வந்த கவாஜா 77 ரன்களில் அவுட்டானார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தும் 34 ரன்களில் அவுட்டானார்.

முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டிய ஹெட் 7 ரன்களில் நடையை கட்டினார். பின்னர், கேமரூன் க்ரீன் 18, கேரி 21, ஸ்டார்க் 15, கம்மின்ஸ் 11 என சிறிய பங்களிப்பை அளித்தனர். காயத்தால் அவதிப்பட்ட லயன் பேட்டிங்கில் களமிறங்கி 13 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணி 279 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி 370 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்து பவுலர்களில் ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டங் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகிய பவுலர்கள் தலா 3 விக்கெட்டுகளையும் கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.