Eng vs Ire: டி20 போல் அதிரடி காட்டிய இங்கிலாந்து! 90 ஓவர்களுக்குள் 500+ ஸ்கோர் - தோல்வியை தவிர்க்க போராடும் அயர்லாந்து
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Eng Vs Ire: டி20 போல் அதிரடி காட்டிய இங்கிலாந்து! 90 ஓவர்களுக்குள் 500+ ஸ்கோர் - தோல்வியை தவிர்க்க போராடும் அயர்லாந்து

Eng vs Ire: டி20 போல் அதிரடி காட்டிய இங்கிலாந்து! 90 ஓவர்களுக்குள் 500+ ஸ்கோர் - தோல்வியை தவிர்க்க போராடும் அயர்லாந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 03, 2023 09:50 AM IST

அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நெருக்கடியுடன் அயர்லாந்து அணி 255 ரன்கள் பின்னடைவுடன் உள்ளது.

முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் இங்கிலாந்த பெளலர் டங்
முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் இங்கிலாந்த பெளலர் டங்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து முதல் நாள் தேநீர் இடைவெளிக்கு பின்னர் 172 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்தின் வேகப்பந்த வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 152 ரன்கள். இதன்பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து தொடர்ந்து அயர்லாந்து பெளலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர்.

டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் அதிரடியாக பேட் செய்த ஜாக் கிராவ்லி 45 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதேபோல் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான பென் டக்கெட் 178 பந்துகளில் 182 ரன்கள் எடுத்தார்.

இவரை தொடர்ந்து மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஓலி போப் 208 பந்துகளுக்கு 205 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜோரூட் 59 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

82.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் எடுத்த தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி 352 ரன்கள் முன்னிலை பெற்றது. டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் டி20 ஆட்டம் போல் அதிரடியாக பேட் செய்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஒபனிங் பேட்ஸ்மேன் 100க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டும், அடுத்த இரண்டு பேட்ஸ்மேன்கள் 90க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டும் எடுத்தனர்.

அயர்லாந்து பெளலர்களில் கிரஹாம் ஹுயும், பியான் ஹாண்ட் ஆகிய இருவர் மட்டும் 6க்கும் குறைவான எகானமியில் பந்து வீசினர். மற்றவர்கள் ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்து துவம்சம் செய்தனர்.

அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், இங்கிலாந்து பெளலர்களை சமாளிக்க முடியாமல் மீண்டும் திணறியது. ஓபனிங் பேட்ஸ்மேன் பீட்டர் மூர் 11 ரன்களில் அவுட்டாக்கிய இங்கிலாந்து பெளலர் ஜோஸ் டங், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். அதே ஓவரில் அயர்லாந்து கேப்டன் பால்பிர்னியையும் 2 ரன்னில் அவுட்டாக்கினார்.

இதற்கு அடுத்த ஆட்டத்தின் 8வது ஓவரில் டங் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சித்த அயர்லாந்து ஓபனிங் பேட்ஸ்மேன் மெக்கல்லம் வலது காலில் காயமடைந்து சுருண்டு விழுந்தார். பின்னர் Retired Hurt ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இவரைத்தொடர்ந்து பேட் செய்த அயர்லாந்து அணியின் ஸ்டிரைக் பேட்ஸ்மேனான ஸ்டிர்லிங் 15 ரன்னில் நடையை கட்டினார்.

ஹாரி டெக்டர் 33, லோர்கன் டக்கர் 21 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு அயர்லாந்து அணி 97 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் அயர்லாந்து அணி 255 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ளது. எனவே இன்னிங்ஸை தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய நிலையில் அயர்லாந்து அணி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.