Eng vs Aus: முதல் பந்திலேயே பவுண்டரி! Ashes 2023 தொடரை ஆர்ப்பாட்டமாக தொடங்கிய இங்கிலாந்து
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Eng Vs Aus: முதல் பந்திலேயே பவுண்டரி! Ashes 2023 தொடரை ஆர்ப்பாட்டமாக தொடங்கிய இங்கிலாந்து

Eng vs Aus: முதல் பந்திலேயே பவுண்டரி! Ashes 2023 தொடரை ஆர்ப்பாட்டமாக தொடங்கிய இங்கிலாந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 16, 2023 05:09 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சிக்கான போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருடன் தொடங்கியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிரிமிங்காமில் நடைபெறுகிறது.

ஆஷஸ் கோப்பையுடன் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் (இடது), இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (வலது)
ஆஷஸ் கோப்பையுடன் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் (இடது), இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (வலது) (AP)

இந்த போட்டியில் விளையாடக்கூடிய அணியை ஏற்கனவே இங்கிலாந்து அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து இடது கை பேட்ஸ்மேனும், ஸ்பின்னருமான மொயின் அலி அணிக்கு திரும்பியுள்ளார். மார்க்வுட்க்கு பதிலாக ஸ்டுவர்ட் பிராட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை முதல் முறையாக வேகப்பந்து வீச்சாளர் மாற்று வீரராக இல்லாமல் அணியில் ஆடும் லெவனில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் காயமடைந்த வீரருக்கு மாற்றாகவே அணியில் சேர்க்கப்பட்டார்.

அத்துடன் போலாந்து விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7இல் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் விக்கெட்டை 4 முறையும், ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை 3 முறையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டி தொடங்கிய முதல் பந்திலேயே கிளாஸ் ஆன கவர் டிரைவ் ஆடி பவுண்டரி மூலம் தொடங்கியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸாக் கிராவ்லி.

முந்தைய ஆஷஸ் தொடர் கடந்த 2021-22இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தன் வசம் வைத்துள்ளது.

இந்த முறை 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று தொடங்கி ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கிறது.

இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி லீட்ஸில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும், ஜூலை 19 மான்சஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 27 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை ஆஷஸ் தொடரில் 340 போட்டிகளில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 140, இங்கிலாந்து 108 வெற்றிகளை பெற்றுள்ளன. 92 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

மொத்த 72 ஆஷஸ் தொடர்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் 34இல் ஆஸ்திரேலியாவும், 32இல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 6 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.