Ishan Kishan: 'எப்போதும் ஆக்ரோஷமாக விளையாட முடியும் என நான் நினைக்கவில்லை'
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ishan Kishan: 'எப்போதும் ஆக்ரோஷமாக விளையாட முடியும் என நான் நினைக்கவில்லை'

Ishan Kishan: 'எப்போதும் ஆக்ரோஷமாக விளையாட முடியும் என நான் நினைக்கவில்லை'

Manigandan K T HT Tamil
Jul 25, 2023 03:48 PM IST

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய பேஸ்ட்மேன் இஷான் கிஷன்
இந்திய பேஸ்ட்மேன் இஷான் கிஷன் (BCCI Twitter)

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மழை காரணமாக ஆட்டம் ரத்தானது.

இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பின்னர் செய்தியாளர்களிடம் இஷான் கிஷன் கூறியதாவது:

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதே வேகத்துடன் விளையாட முடியாது, அது சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

அது சூழ்நிலையைப் பொறுத்தது. இங்கிலாந்து விளையாடிய விதம், ஆடுகளங்களையும் பார்க்க வேண்டும். நாங்கள் விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் எளிதானவை அல்ல. பந்துகள் எழும்பி வரக் கூடிய ஆடுகளங்களாக உள்ளன. எனவே, நான் அதிரடியாக விளையாடுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையைப் பொறுத்துதான் விளையாட முடியும்.

ஆடுகளம் ஃபிளாட்டாக இருந்தால், அங்கு நீங்கள் விரைவாக ஸ்கோர் செய்ய முடியும். மேலும் விரைவாக ரன்களைப் பெறுவதே அணியின் தேவை என்றால், நீங்கள் அதுபோன்று அதிரடியாக விளையாடலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமான முறையில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம், எங்கள் அணிகளில் போதுமான பவர் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் தாக்குதல் ஷாட்களை விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றார் இஷான் கிஷன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.