Bradley Currie Catch: கிரிக்கெட் உலகின் சிறந்த கேட்ச்! சூப்பர்மேன் போல் பறந்து ஒற்றை கையில் பிடித்த வீரர் - விடியோ
இங்கிலாந்தின் பிளாஸ்ட் டி20 தொடரில் சசக்ஸ் அணி வீரரும், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவருமான பிராட்லி கரி சூப்பர் மேன் போல் பறந்தவாறு பிடித்த கேட்ச் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மிக சிறந்த கேட்ச் எனவும் வர்ணிக்கப்பட்டு வருகிறது.
டி20 போட்டிகளில் வருகையை கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் சிறந்து பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூன்று மணிநேர்த்தில் அந்த போட்டிகள் முடிவடைவதுடன், பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம், பீல்டர்களின் விறுவிறுப்பான பீல்டிங், அசாத்தியமான கேட்ச்கள், பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சு போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக அமைகின்றன.
டி20 போட்டியின் வருகைக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட்டும் வீரர்கள் பீல்டிங்கில் காட்டி வரும் சாகசங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஒரு ரன்னை தடுப்பதற்காக பீல்டர்கள் மேற்கொள்ளும் முயற்சி, ரிஸ்க் போன்றவை ஆட்டத்தின் போக்கையை மாற்றக்கூடியதாக அமைகிறது.
அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பீல்டர் ஒருவர் பவுண்டரி அருகே சூப்பர் மேன் போல் பறந்த பிடித்த கேட்ச் சர்வதேச வீரர்கள் சிலரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடராக டி20 பிளாஸ்ட் உள்ளது. இந்த தொடரின் நடப்பு சீசனில் சசக்ஸ் - ஹேம்ஷைர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த சசக்ஸ் அணி 183 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை விரட்டிய ஹேம்ஷைர் அணிக்கு ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பென்னி ஹோவல் அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஆட்டத்தின் 14வது ஓவரில் ஃபுல் ஷாட் ஆடி பந்தை சிக்ஸருக்கு அவர் பறக்க விட முயற்சித்தார். ஆனால் பந்தை விட வேகமாக சூப்பர் மேன் போல் பறந்த சசக்ஸ் பீல்டர் பிராட்லி கரி, பவுண்டரி அருகே சரியாக பேலன்ஸ் செய்து ஒற்றை கையில் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
இந்த விக்கெட்டின் மூலமாக சசக்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சிறந்த கேட்சை பிடித்த பிராட்லி கரி பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவரது இந்த கேட்ச் போட்டிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த கேட்ச் என பகிர்ந்து வருகிறார்கள். இந்த கேட்ச் விடியோ டுவிட்டரில் மட்டும் 2.7 மில்லியன் பார்வையை கடந்துள்ளது.
இந்த அற்புதமான கேட்ச் விடியோவை பகிர்ந்த இந்திய வீரர் திணேஷ் கார்த்திக், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்