Madurai Panthers: ‘நெருப்புடா’.. அனல் பறந்த திண்டுக்கல் அணி பந்துவீச்சு: 123 ரன்களில் சுருண்டது மதுரை அணி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Madurai Panthers: ‘நெருப்புடா’.. அனல் பறந்த திண்டுக்கல் அணி பந்துவீச்சு: 123 ரன்களில் சுருண்டது மதுரை அணி

Madurai Panthers: ‘நெருப்புடா’.. அனல் பறந்த திண்டுக்கல் அணி பந்துவீச்சு: 123 ரன்களில் சுருண்டது மதுரை அணி

Manigandan K T HT Tamil
Jun 18, 2023 09:39 PM IST

மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து சுருண்டது.

பந்துவீச்சில் கலக்கிய திண்டுக்கல் அணி
பந்துவீச்சில் கலக்கிய திண்டுக்கல் அணி (@DindigulDragons)

இரவு 7.15 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் ஜெயித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் மதுரை பேந்தர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து சுருண்டது.

120 பந்துகளில் 124 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடவுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் சுபோத் பாட்டீ 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அஸ்வின், மதிவாணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக, தொடக்க வீரர்களாக எஸ்.கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கவுசிங் 45 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் நடையைக் கட்டினார்.

அரை சதம் எட்டிவிட முயன்ற கவுசிக், எல்பிடபிள்யூ ஆனார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.

இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று முதல் 7வது சீசன் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.

Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.