Dindigul Dragons: பாபா இந்திரஜித் அபாரம்-திண்டுக்கல் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
TNPL: திண்டுக்கல் தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி கண்டது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று 8வது லீக் ஆட்டம் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணி ஜெயித்தது.
இரவு 7.15 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் ஜெயித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் மதுரை பேந்தர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து சுருண்டது.
120 பந்துகளில் 124 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடியது. அந்த அணி 14.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி கண்டது திண்டுக்கல். அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார்.
திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்கள் ஷிவம் சிங், விமல் குமார், எஸ்.அருண் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் பொளந்து கட்டினார்.
அவருக்கு ஆதித்யா கணேஷ் தோள் கொடுத்தார். ஆதித்யா இம்பேக்ட் பிளேயராக வந்தார்.
மதுரை பேந்தர்ஸ் சார்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திண்டுக்கல் சார்பில் இன்றைய ஆட்டத்தில் சுபோத் பாட்டீ 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஸ்வின், மதிவாணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக, தொடக்க வீரர்களாக எஸ்.கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கவுசிங் 45 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் நடையைக் கட்டினார்.
அரை சதம் எட்டிவிட முயன்ற கவுசிக், எல்பிடபிள்யூ ஆனார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.
Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்