TNPL Today Preview: 26வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல்-சேலம் இன்று மோதல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Today Preview: 26வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல்-சேலம் இன்று மோதல்

TNPL Today Preview: 26வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல்-சேலம் இன்று மோதல்

Manigandan K T HT Tamil
Jul 03, 2023 06:40 AM IST

திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ்
திண்டுக்கல் டிராகன்ஸ் (@DindigulDragons)

திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

டி.என்.பி.எல் 2023 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ராயல் கிங்ஸ் அணியை 159/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய டிராகன்ஸ் அணியில் சுபோத் பாட்டி, மதிவாணன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஷிவம் சிங் (51), விமல் குமர் (62) ஜோடி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்த நிலையில் ஸ்கோரை எட்ட உதவியது.

இப்போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி சற்று தடுமாறி வருகிறது. அந்த அணி 6 ஆட்டங்களில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் உள்ளது. முந்தைய போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை தோற்கடித்தது.

அதிகபட்சமாக சன்னி சந்து 61 ரன்கள் எடுத்தாலும் மறுமுனையில் இருந்து ஆதரவு கிடைக்காததால் ஸ்பார்ட்டன்ஸ் அணி 155 ரன்களுக்கு சுருண்டது. பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி திருப்பூர் தமிழன்ஸ் அணியை 147/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்க சேலம் ஸ்பார்ட்டன்ஸ் நிச்சயம் போராடும். இதனால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

திண்டுக்கல் டிராகன்ஸ்

விமல் குமர், பூபதி குமார், ஆதித்யா கணேஷ், பாபா இந்திரஜித் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சி.சரத்குமார், சுபோத் பாட்டி, பி.சரவண குமார், எம்.மதிவண்ணன், வருண் சக்கரவர்த்தி, அவுஷிக் ஸ்ரீனிவாஸ், ஜி.கிஷோர் மற்றும் ஷிவம் சிங்.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ்

எஸ்.அரவிந்த், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், கவுசிக் காந்தி, ஆர்.கவின் (விக்கெட் கீப்பர்), எஸ்.அபிஷிக், சன்னி சந்து, முகமது அட்னான் கான், ஆகாஷ் சும்ரா, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ஜெகநாத் சீனிவாஸ் மற்றும் சச்சின் ரதி.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.