TNPL Match Preview: தொடர் வெற்றியை தக்க வைக்குமா திண்டுக்கல்? கோவை கிங்ஸுடன் இன்று மோதல்
திண்டுக்கல் அணி, திருச்சி, மதுரை, சேப்பாக் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் நேற்று போல் இன்றும் 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சேலம் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் கிரவுண்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் ஜெயித்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக்கை நெல்லை வீழ்த்தியதால் 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது.
கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3இல் ஜெயித்துள்ளது. அந்த அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணி, திருச்சி, மதுரை, சேப்பாக் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.
திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதுடன் லாவகமாக பந்துவீசும் திறன் படைத்தவர். வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சரவண குமார் என அபாரமாக பந்துவீசும் ஆற்றல் படைத்தவர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.
இது திண்டுக்கல் அணிக்கு பலம் ஆகும். பேட்டிங்கில் ஷிவம் சிங், இந்திரஜித், ஆதித்ய கணேஷ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நம்பிக்கையாக இருக்கின்றனர்.
லைக்கா கோவை கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக், திருச்சி ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது. நெல்லை அணியிடம் மட்டும் தோல்வி கண்டது.
கோவை கிங்ஸ் அணியைப் பொறுத்தமட்டில், சுஜாய், சுரேஷ் குமார், சாய் சுதர்ஷன் என அதிரடி வீரர்கள் பலர் உள்ளனர்.
யுதீஸ்வரன், கேப்டன் ஷாருக் கான், எம்.சித்தார்த் ஆகிய பந்துவீச்சாளர்களும் நம்பிக்கை தரும் வகையில் பந்துவீசி வருகின்றனர்.
சேலத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பரபரப்பு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
ஃபேன்கோடு செயலியில் இப்போட்டியை கட்டணம் செலுத்தி கண்டு ரசிக்கலாம்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலிலும் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்