Dindigul Dragons: சிக்ஸர் அடித்து முடித்த சுபோத்-திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி
TNPL: பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 4வது லீக் ஆட்டம் இன்றிரவு 7.15 மணிக்கு கோவையில் தொடங்கியது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும், கங்கா ஸ்ரீ ராஜு தலைமையிலான திருச்சி அணியும் மோதின.
டாஸ் வென்ற திருச்சி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 120 ரன்களை எடுத்தது. இதையடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வென்றது. இந்த சீசனில் இது முதல் வெற்றியாகும்.
முதலில் களமிறங்கிய கங்கா ஸ்ரீதர் ராஜு 16வது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடினார். அதைத் தொடர்ந்து அஸ்வின் பந்துவீச்சில் 48 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
ஆனால், மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பினர். அடுத்தடுத்து அந்த அணியின் வீரர்கள் ஜாஃபர் ஜமால், அக்ஷய் ஸ்ரீநிவாசன், டேரில் ஃபெராரியோ, மணி பாரதி, எம்.ஷாஜஹான், ஆண்டனி தாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ராஜ்குமார் 39 ரன்கள் எடுத்தார்.
பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். எஸ்.அருண் 1 விக்கெட்டை எடுத்தார்.
இவ்வாறாக 19.1 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களை சேர்த்தது. 121 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் விளையாடியது.
இதையடுத்து விளையாடி திண்டுக்கல் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்தது.
ஷிவம் சிங் 46 ரன்கள் விளாசி அற்புதமான ஸ்டார்ட்டை ஏற்படுத்தி்க கொடுத்தார். எனினும் அரை சதம் அடிப்பதற்குள் அலெக்ஸாண்டர் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் 22 ரன்களிலும் சரத்குமார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சுபோத் 19 ரன்களிலும் ஆதித்ய கணேஷ் 20 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சுபோத் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி ஆகிய அணிகள் மோதின. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இப்போட்டி நடந்தது.
கடந்த ஆண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு பெரிய அளவில் பர்ஃபாமன்ஸ் சரியாக இல்லை.
பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட கடந்த ஆண்டு முன்னேறவில்லை. லீக் சுற்று முடிவில் 6வது இடத்தைப் பிடித்தது திண்டுக்கல்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 2 முறை ஃபைனல்ஸுக்கு முன்னேறியிருக்கும் ஓர் அணி, இவ்வாறு சொதப்பியது அந்த அணியின் ரசிகர்களுக்கு கவலையாக அமைந்தது.
இதுவரை இரு அணிகளும் ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை. இந்த முறை இரு அணிகளும் முதல் முறையாக சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.
இந்த முறை இன்று முதல் தொடங்கி ஒரு மாத காலம் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டி நடக்கவுள்ளது.
மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
டாபிக்ஸ்