TNPL Preview: நடராஜன் யார்க்கர் ஒருபக்கம், அஸ்வின் சுழல் மறுபக்கம்-திண்டுக்கல், திருச்சி மோதல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Preview: நடராஜன் யார்க்கர் ஒருபக்கம், அஸ்வின் சுழல் மறுபக்கம்-திண்டுக்கல், திருச்சி மோதல்

TNPL Preview: நடராஜன் யார்க்கர் ஒருபக்கம், அஸ்வின் சுழல் மறுபக்கம்-திண்டுக்கல், திருச்சி மோதல்

Manigandan K T HT Tamil
Jun 14, 2023 08:46 PM IST

Tamilnadu Premier Leauge: பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட கடந்த ஆண்டு முன்னேறவில்லை. லீக் சுற்று முடிவில் 6வது இடத்தைப் பிடித்தது திண்டுக்கல்.

திண்டுக்கல்-திருச்சி வீரர்கள்
திண்டுக்கல்-திருச்சி வீரர்கள் (@Ba11syTrichy)

இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி ஆகிய அணிகள் மோதுகின்றன. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.

கடந்த ஆண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு பெரிய அளவில் பர்ஃபாமன்ஸ் சரியாக இல்லை.

பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட கடந்த ஆண்டு முன்னேறவில்லை. லீக் சுற்று முடிவில் 6வது இடத்தைப் பிடித்தது திண்டுக்கல்.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 2 முறை ஃபைனல்ஸுக்கு முன்னேறியிருக்கும் ஓர் அணி, இவ்வாறு சொதப்பியது அந்த அணியின் ரசிகர்களுக்கு கவலையாக அமைந்தது.

இந்த முறை அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கலாம். பாபா இந்திரஜித் திண்டுக்கல் அணியை வழிநடத்தவுள்ளார்.

திருச்சி அணியும் கடந்த ஆண்டு பெரிய அளவில் ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை.

இதுவரை இரு அணிகளும் ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை. இந்த முறை இரு அணிகளும் முதல் முறையாக சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும்.

திருச்சி அணியில் நடராஜன் இருப்பது சிறப்பு. திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். அஸ்வின் இணைகிறார்.

அஸ்வின் சுழலில் மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

இதனால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.

ஃபேன்கோடு செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த முறை இன்று முதல் தொடங்கி ஒரு மாத காலம் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டி நடக்கவுள்ளது.

மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி, நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.