CWC Qualifiers: பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஹசரங்கா! இரண்டு தொடர் வெற்றிகள் - ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwc Qualifiers: பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஹசரங்கா! இரண்டு தொடர் வெற்றிகள் - ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

CWC Qualifiers: பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஹசரங்கா! இரண்டு தொடர் வெற்றிகள் - ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 23, 2023 06:49 PM IST

இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்று உலகக் கோப்பை தகுதி சுற்று தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வருகிறது. இரண்டு போட்டிகளிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பவுலராக இருந்து வருகிறார் இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்கா.

ஓமனுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா
ஓமனுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஓமன் பேட்ஸ்மேன்கள் இலங்கை பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 30.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்து ஓமன் அணி ஆல்அவுட்டானது. இந்த அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அயன் கான் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜதீந்தர் சிங் 21, ஃபயாஸ் பட் 13 ரன்கள் எடுத்தனர். இலங்கை ஸ்பின்னரான ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இந்த எளிய இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 15 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் இதுவரை இரண்டு போட்டிகள் மட்டும் விளையாடியுள்ளது இலங்கை அணி. முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக 175 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வருகிறது.

இந்த இரண்டு போட்டிகளையும் சேர்த்து இலங்கை ஸ்பின்னர் ஹசரங்கா 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார். முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளையும், ஓமனுக்கு எதிராக இன்றைய போட்டியில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை ஹசரங்கா வீழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.