CWC Qualifiers:5 வருட சோகம்! பழிதீர்த்த ஸ்காட்லாந்து - முதல் முறையாக உலக கோப்பை விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த முறை வெளியேற்றி பழிதீர்த்துள்ளது ஸ்காட்லாந்து அணி. முதல் முறையாக இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இடம்பெறாத உலகக் கோப்பை தொடரை இந்த முறை நடைபெறவுள்ளது.
உலக கோப்பை 2023 தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஹராரே நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் 181 ரன்களில் ஆல்அவுட்டானது. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த எளிய இலக்கை சேஸ் செய்த ஸ்காட்லாந்து 43.3 ஓவரில் 3 வி்ககெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக கோப்பை கணவை தகர்த்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் இதே வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. அப்போது அம்பயரின் சர்ச்சைக்குள்ளான முடிவு, திடீரென குறுக்கிட்ட மழை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதமாக அமைந்து ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. இதன் காரணமாக 2019 உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. இந்த சம்பவத்துக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது ஸ்காட்லாந்து அணி பழிதீர்த்துள்ளது.
உலக கோப்பை தகுதி சுற்று அரையிறுதி போட்டிக்கு இலங்கை, ஜிம்பாப்வே,ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முன்னதாக லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளில் 2இல் மட்டும் வெற்றி பெற்று தனது பிரிவில் மூன்றாவது அணியாக சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
இதையடுத்து சூப்பர் சிக்ஸ் சுற்றில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று இருந்த நிலையில், இந்த சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி 5வது இடத்தை பிடித்தது. இதனால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெறும் உலக கோப்பை 2023 தொடரை விளையாடும் வாய்ப்பும் பறிபோனது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான முதல் உலக கோப்பை தொடர் 1975இல் நடைபெற்றது. அப்போது முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நடைபெற்று வரும் நிலையில், முதல் தொடரான 1975, 1979 ஆகிய இரு ஆண்டுகள் தொடர்ந்த சாம்பியன் பட்டத்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்.
இதன்பின்னரும் 1983 உலக கோப்பையில் இறுதிபோட்டி வரை தகுதி பெற்று இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. 1983 உலக கோப்பை தொடருக்கு பின்னர் 1996 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து உலக கோப்பை தொடர்களில் லீக், குரூப் பிரிவு ஆட்டங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி வந்தது. இதையடுத்து தற்போது முதல் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
ஒரு காலத்தில் உலக அணிகள் பார்த்து பயந்து நடுங்கிய ஜாம்பவான் அணியாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் உலக கோப்பை தொடரிலேயே விளையாட முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் தகுதி சுற்றில் தோல்வியடைந்து, தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இப்போது ஒரு நாள் உலக கோப்பை தொடரிலும் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
டாபிக்ஸ்