CWC Qualifiers 2023: ஹசரங்கா நிகழ்த்திய சாதனை! ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய இலங்கை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwc Qualifiers 2023: ஹசரங்கா நிகழ்த்திய சாதனை! ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய இலங்கை

CWC Qualifiers 2023: ஹசரங்கா நிகழ்த்திய சாதனை! ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய இலங்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 20, 2023 01:50 PM IST

உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் 175 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கு வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தியுள்ளது இலங்கை அணி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி
ஐக்கிய அரபு அமீரகம் அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து 356 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டியது ஐக்கிய அரபு அமீரகம். இதில் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹன் முஸ்தபா 12 ரன்னில் அவுட்டாகி ஆட்டத்தின் 5வது ஓவரிலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் முகமது வாசிம் - விரத்யா அரவிந்த் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வாசிம் 39, அரவிந்த் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்கள்.

மாற்ற பேட்ஸ்மேன்கள் இலங்கை ஸ்பின்னரான ஹசரங்கா டி சில்வா பந்தை எதிர்கொள்ள முடியாமல் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நாசர் 34, ரமீஸ் ஷாஸத் 26 ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர்.

39 ஓவரில் 180 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 175 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இலங்கை ஸ்பின்னரான ஹசரங்கா டி சில்வா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஒருநாள் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்துள்ளது.

முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த ஹசரங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணிக்காக 42 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்கா 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

1996ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி, 2007 உலகக் கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை வென்ற அணியான இலங்கைக்கு இந்த முறை உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டுமானால் தகுதி சுற்றில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் இலங்கை அணி இடம்பிடித்திருக்கும் குரூப் பி பிரிவில் ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளது. இந்த பிரிவில் ஸ்காட்லாந்து தவிர மற்ற அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி முடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஓமன் அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.