West Indies: தாமதமாக ஓவர் வீசியதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிப்பு
ICC Cricket World Cup Qualifiers 2023: ஜிம்பாப்வே அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸை ஹராரேவில் எதிர்கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓவரை மெதுவாக வீசியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸை ஹராரேவில் எதிர்கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது.
கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப், அகில் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அப்போது கொஞ்சம் நேரம் எடுத்து பந்துவீசியது வெஸ்ட் இண்டீஸ்.
இதையடுத்து, விளையாடிய அந்த அணி 233 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 44.4 ஓவர்களில் சுருண்டது.
அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் அரை சதம் விளாசினார். இந்நிலையில், தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.22 இன் படி, வீரர்கள் தங்கள் அணி இலக்கை விட குறைவாக இருக்கும் ஒவ்வொரு ஓவருக்கும் அவர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது, மேலும் நேர கொடுப்பனவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் மேற்கிந்திய தீவுகள் இலக்கை விட மூன்று ஓவர்கள் குறைவாக வீசியதாக கருதப்பட்டது.
கேப்டன் ஷாய் ஹோப் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக் கொண்டார்.
கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 3வது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்