Cristiano Ronaldo: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் ரொனால்டோ
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cristiano Ronaldo: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் ரொனால்டோ

Cristiano Ronaldo: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் ரொனால்டோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 11, 2023 02:03 PM IST

போர்ச்சுகல் அணி நட்சத்திர வீரரும், அல் நசர் கிளப் அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்ஸ்டாவில் அதிகமாக சம்பாதிக்கும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அல் நசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
அல் நசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (AFP)

ஒவ்வொரு இன்ஸ்டா பதிவுக்கும் அதன் பயனாளர் நிர்ணயிக்கும் விலைபட்டியலின் அடிப்படையில் இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரொனால்டோ 3.23 million டாலர்களை சம்பாதிக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு 2.6 million டாலர்கள் சம்பாத்திக்கிறார்.

இந்த இரண்டு கால்பந்து வீரர்களுக்கும் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பிரபலங்களான பாடகி, நடிகை செலீனா கோமஸ், ரியாலிட்டி ஸ்டார் கெய்ல் ஜென்னர், நடிகர் டுவெய்ன் ஜான்சன் ஆகியோருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த எலைட் லிஸ்டில் மற்றொரு நட்சத்திர கால்பந்து வீரரான பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மார், இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஆகியோரும் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் முதல் இடத்தில் இருந்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ. முதல் முறையாக 2017ஆம் ஆண்டில் அவர் அதிக சம்பளம் பெறும் வீரராக உருவெடுத்தார். இதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் அதிக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற கின்னஸ் சாதனையும் ரொனாஸ்டோ புரிந்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் செளதி அரேபியா கிளப் அணியான அல் நசர் அணிக்கு ஒப்பந்தமான ரொனால்டோ, கால்பந்து உலகில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற பெருமையை பெற்றார். 2025 சீசன் வரை அவர் அல் நசர் அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்த அணிக்காக 24 முறை போட்டிகளில் பங்கேற்றுள்ள ரொனால்டோ 18 கோல்கள் அடித்துள்ளார். அராப் கிளப் சாம்பியின்ஸ் கோப்பையில் அல் நசர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் விதமாக முக்கிய கோல் அடித்து திருப்புமுனை ஏற்படுத்தினார் 38 வயதாகும் ரொனால்டோ. இதையடுத்து இறுதிப்போட்டியில் அல் ஹிலால் அணியை அல் நசர் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது நாளை நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.