Cristiano Ronaldo fined: நட்சத்திர வீரர் ரெனால்டோவுக்கு ரூ. 50 லட்சம் அபராதம்
மான்சஸ்டர் கிளப் அணியிலிருந்து விலகி எந்த கிளப்பையும் சேர்ந்திடாத நட்சத்திர வீரராக மாறிய அடுத்த இரு நாள்களில், கடந்த ஏப்ரலில் ரசிகர் செல்போனை உடைந்ததாக எழுந்த சர்ச்சைக்கு தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அபராதமும், தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர் கடந்த ஏப்ரம் மாதம் நடைபற்ற கிளப் ஆட்டம் ஒன்றில், தான் விளையாடிய மான்சஸ்டர் யுனைடெட் அணி எவர்டான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய விரக்தியில், ரசிகர் ஒருவரின் கோபத்தை வெளிப்படுத்தி அவரது செல்போனை உடைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இங்கிலாந்து கால்பந்து அசோசியேஷன் அவர் இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் அபராதமும், 2 கிளப் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து கிளப் அணியான மான்சஸ்டர் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளர், இங்கிலாந்து முன்னாள் வீரர் ரூனி குறித்து பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த அணிக்காக ரொனால்டோ விளையாடவே இல்லை.
அத்துடன் இந்த சர்ச்சை காரணமாக அணி நிர்வாகத்துடன் பேசி பரஸ்பரம் ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில் ரொனால்டோ அந்த அணியை விட்டு விலகியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு விளையாடும் போட்டிக்கு இருநாள்களுக்கு முன்பு ரெனால்டோவின் இந்த முடிவு கால்பந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களையும் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து கடந்த ஏப்ரலில் நிகழ்ந்த சம்பவத்துக்கு தற்போது ரொனால்டோவுக்கு அபராதமும், தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது மோசமான நடத்தை குறித்து இன்ஸ்டாவில் வருத்தம் தெரிவித்திருந்தார் ரெனால்டோ. இருப்பினும் அவர் வெளிப்படுத்திய செயலில் அடைந்த அதிருப்தி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்தார் உலகக் கோப்பை தொடரில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.