TN CM Trophy 2023: முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை
போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு, பேருந்து வசதிகள், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 01-ந் தேதி முதல் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஜுன் 30-ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்- வீராங்கனைகள் சென்னை வந்து போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்ததந்த மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ள 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு, பேருந்து வசதிகள், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்து கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போட்டி நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் பின்வருமாறு.
நடைபெறும் நாட்கள் | போட்டிகள் | நடைபெறும் இடங்கள் |
---|---|---|
ஜுலை – 01 முதல் 25 -வரை | கபடி |
|
ஜுலை – 01 முதல் 10 - வரை | சிலம்பம் |
|
ஜுலை – 01 முதல் 22- வரை | கைப்பந்து |
|
ஜுலை – 03 முதல் 25- வரை | ஹாக்கி |
|
ஜுலை – 03 முதல் 09 - வரை | டென்னிஸ் |
|
ஜுலை – 04 முதல் 13- வரை | கிரிக்கெட் |
|
ஜுலை – 05 முதல் 11 - வரை | பூப்பந்து |
|
ஜுலை – 05 முதல் 12 - வரை | கூடைப்பந்து |
|
ஜுலை – 07 முதல் 10 - வரை | நீச்சல் |
|
ஜுலை – 05 முதல் 07 - வரை | டேபிள் டென்னிஸ் |
|
ஜுலை – 09 முதல் 12 - வரை | பளு தூக்குதல் |
|
ஜுலை – 09 முதல் 11 - வரை | கடற்கரை கைப்பந்து |
|
ஜுலை - 12 | சதுரங்கம் |
|
ஜுலை – 12 முதல் 25 – வரை |
கால்பந்து |
|
ஜுலை – 15 முதல் 19 - வரை | தடகளம் |
|
ஜுலை – 13 முதல் 19 - வரை | மாற்றுத்திறனாளி |
|
டாபிக்ஸ்