TNPL: பட்டையைக் கிளப்பிய மதுரை பேந்தர்ஸ்!-சேப்பாக் தொடர்ச்சியாக 4வது தோல்வி
Siechem Madurai Panthers: மதுரை பேந்தர்ஸ் அணி 18வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று 18வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை பேந்தர்ஸ் முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை பேந்தர்ஸ் அணி 141 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விளையாடியது. ஆனால், அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களில் சுருண்டது. மதுரை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய சந்தோஷ் சிவ், 28 ரன்களிலும், என்.ஜெகதீசன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபா அபராஜித் மட்டும் களத்தில் நின்று விளையாடினார்.
மறுபக்கம் சஞ்சய் யாதவ், பிரதோஷ் பால், ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாபா அபராஜித் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அஜய் கிருஷ்ணா அசத்தலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை தூக்கினார். குர்ஜாப்னீத் சிங் 1 விக்கெட்டை எடுத்தார்.
முன்னதாக, ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஆதித்யநாவும், ஹரி நிஷாந்தும் களமிறங்கி பெரிய ஸ்கோர் எதுவும் பதிவு செய்யாமல் அடுத்தடு ஆட்டமிழந்தனர்.
ஜெகதீசன் கவுசிக், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோரும் நிலைத்து நிற்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
மதுரை அணி டாப் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பியது. பின்னர், வந்த ஸ்ரீ அபிஷேக் 21 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் நிலைத்து நின்றார்.
வாஷிங்டன் சுந்தரால் அணி ஓரளவு கவுரமான ஸ்கோரை எட்டியது. அவரும் அரை சதம் விளாசி அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸ், 2 ஃபோர் விளாசினார் வாஷிங்டன்.
இவ்வாறாக 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி விளையாடியது.
டாபிக்ஸ்