Madurai Panthers: ஒரே ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர்-141 ரன்களை எட்டியது மதுரை பேந்தர்ஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Madurai Panthers: ஒரே ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர்-141 ரன்களை எட்டியது மதுரை பேந்தர்ஸ்

Madurai Panthers: ஒரே ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர்-141 ரன்களை எட்டியது மதுரை பேந்தர்ஸ்

Manigandan K T HT Tamil
Jun 26, 2023 08:45 PM IST

Chepauk Super Gillies: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை பேந்தர்ஸ் அணி 141 ரன்களை எடுத்தது.

பந்தை விளாசிய மதுரை வீரர்
பந்தை விளாசிய மதுரை வீரர் (@TNPremierLeague)

டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை பேந்தர்ஸ் முதலில் விளையாடியது.

இதையடுத்து ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஆதித்யநாவும், ஹரி நிஷாந்தும் களமிறங்கி பெரிய ஸ்கோர் எதுவும் பதிவு செய்யாமல் அடுத்தடு ஆட்டமிழந்தனர்.

ஜெகதீசன் கவுசிக், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோரும் நிலைத்து நிற்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

மதுரை அணி டாப் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பியது. பின்னர், வந்த ஸ்ரீ அபிஷேக் 21 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் நிலைத்து நின்றார்.

வாஷிங்டன் சுந்தரால் அணி ஓரளவு கவுரமான ஸ்கோரை எட்டியது. அவரும் அரை சதம் விளாசி அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸ், 2 ஃபோர் விளாசினார் வாஷிங்டன்.

இவ்வாறாக 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி விளையாடவுள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 இல் தோல்வி அடைந்திருக்கிறது.4 புள்ளிகளுடன் அந்த அணி உள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1 இல் வெற்றியும் 2 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி ஜெயித்தது.

ஆனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வி அடைந்தது.

நெல்லை, திண்டுக்கல், லைக்கா கோவை ஆகிய அணிகளுடன் அந்த அணி தோல்வி கண்டது. தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும், 2 ஆட்டங்கள் மட்டுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு இருக்கிறது. இன்றைய ஆட்டமும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் திருச்சிக்கு எதிரான ஆட்டமும் தான் உள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணியை பொறுத்தவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஜெயித்திருக்கிறது. நெல்லை, திண்டுக்கல் ஆகிய அணிகளிடம் மதுரை அணி தோல்வி கண்டுள்ளது.

சேலத்தை மட்டும் மதுரை வீழ்த்தியிருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் மதுரைக்கு காத்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.