Chepauk Super Gillies: கடைசி ஓவரில் 4 நோ பால் வீசிய சேலம் பவுலர்-சேப்பாக் 217 ரன்கள் குவிப்பு
TNPL: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அணி 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்தது.
இன்றிரவு கோவையில் 2வது லீக் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் ஜெயித்த சேப்பாக் அணி, முதலில் பேட்டிங் செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிரதோஷ் பால் அரை சதம் விளாசினார்.
என்.ஜெகதீஷன் 35 ரன்களிலும், கேப்டன் பாபா அபராஜித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிரதோஷ் பால் 55 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சேலம் தரப்பில் சன்னி சாந்து அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். அபிஷேக் தன்வார் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.
மோஹித் ஹரிஹரன் 1 விக்கெட்டை எடுத்தார். கடைசி ஓவரில் 4 நோ பால், ஒரு வைடு வீசினார் அபிஷேக் தன்வார். இவ்வாறாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது சேப்பாக் அணி. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடவுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று முதல் 7வது சீசன் போட்டி நேற்று தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் கோவை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. திருப்பூர் தமிழன்ஸ் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இன்று இரவு கோவையில் 2வது லீக் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7.10 மணிக்கு எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இப்போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மிகவும் மோசமான நிலையை சந்தித்தது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில்
7 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த சீசனில் மோசமாக இருந்த இந்த அணி, இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். டி.என்.பி.எல் 2023 இல் ஸ்பார்ட்டன்ஸ் அணியை கவுசிக் காந்தி வழிநடத்துகிறார்.
இதனிடையே நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கடந்த ஆண்டு இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து லைகா கோவை கிங்ஸ் அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியிருந்தது.
சூப்பர் கில்லீஸ் அணி கடந்த ஆண்டு ஒரு அற்புதமான சீசனைக் கொண்டிருந்தது மற்றும் இந்த டி.என்.பி.எல் சீசனில் ஐந்தாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த முறை சூப்பர் கில்லீஸ் அணியை வழிநடத்தும் பாபா அபராஜித், வெற்றிக் கொடி நாட்டும் முனைப்பில் இருக்கிறார்.
எஸ்.என்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்றதாக உள்ளது. இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர் போட்டிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
நேற்றைய முதல் ஆட்டத்திலும் கோவை கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி 179 ரன்களை விரட்டியது.
டாபிக்ஸ்