Chepauk Super Gillies: கில்லீஸை 126 ரன்களில் கட்டுப்படுத்தியது கிங்ஸ்!
TNPL 2023: முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதி விளையாடி வருகின்றன.
திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
120 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் விளையாடவுள்ளது.
பிரதோஷ் பால் 6 ரன்னிலும், கேப்டன் ஜெகதீசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சந்தோஷ் சிவ், அபராஜித், சஞ்சய் யாதவ் ஆகியோரும் சொதப்பினர்.
சசிதேவ், ஹரிஷ் குமார் ஆகியோர் தான் நிதானமாக விளையாடி ஓரளவு ரன் சேர உதவினர். இவ்வாறாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை சேப்பாக் அணி சேர்த்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 7வது சீசன் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குரூப் பெற்றுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.
Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்