MS Dhoni: ‘தல தரிசனம்'-அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி எப்படி இருக்கிறார்?-வைரலாகி வரும் போட்டோ
Chennai Super Kings: இட்லி, வடை சாப்பிடுவதற்கு தயாராவது போன்று இருக்கிறகு அந்தப் புகைப்படம். இவர் தமிழர் போல் மாறி வருகிறார் என ரசிகர் ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மும்பையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் இட்லி சாப்பிடுவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் இட்லி, வடை சாப்பிடுவதற்கு தயாராவது போன்று இருக்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் கமென்ட்டுகளை பெற்று வருகிறது. அந்தப் புகைப்படங்களை சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குளில் பகிர்ந்து வருகின்றனர்.
தோனி தமிழராக மாறி வருகிறார் என ஒரு ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு 5வது முறையாக கோப்பையை வென்று தந்தார் தோனி. இந்த சீசனில் முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும், அதை பெரிதாக பொருட்படுத்தாமல் விக்கெட் கீப்பிங்குடன் கேப்டன்ஷிப் பொறுப்பையும் செய்து வந்தார்.
அதன் பலனாக சிஎஸ்கே ஜெயித்தது. சென்னையிலிருந்து நேரடியாக மும்பை வந்த அவர், இங்குள்ள பிரபல மருத்துவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மும்பை வந்தபோது பகவத் கீதையுடன் அவர் மருத்துவமனை சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்கள் ஆன நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஐபிஎல் 2023 சீசன் முழுக்க 16 போட்டிகளில் விளையாடிய எம்எஸ் தோனி 12 இன்னிங்ஸில் பேட் செய்து 8 போட்டிகளில் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
மொத்தம் 57 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோராக 32 நாட் அவுட் உள்ளது. 182.45 என சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் தோனி, 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்