Chennai Masters: அர்ஜுன் எரிகைசி தோல்வி! மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணாவிடம் வீழ்ந்தார்! குகேஷ் ஆட்டம் டிரா
சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா, உக்ரைன் வீரர் பாவெல் எல்ஜனோவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ்
சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் 8 பேர் பங்கேற்கும் போட்டியாக டிசம்பர் 15 முதல் 21 வரை நடைபெறுகிறது. இதையடுத்து நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பென்டாலா ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் மோதினர்.
இதில், ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஈரான் நாட்டு வீரர் பர்ஹாம் மக்சூட்லூவை, உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் வீழ்த்தினார்.
மற்றொரு இந்தியரான டி குகேஷ், அமெரிக்காவின் லெவன் அரோனியனுக்கு எதிராக மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி இறுதியில் டிராவில் முடிந்தது. அதேபோல் நேற்றைய நாளில் நடைபெற்ற கடைசி போட்டியில் இரண்டு ரஷ்யர்கள் சனன் ஸ்ஜுகிரோவ் மற்றும் அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதினர். இந்த போட்டியும் டிராவில் முடிவடைந்தது.