WTC Final: போலி நம்பிக்கையில் இருக்கக் கூடாது-ஹர்பஜன் சிங் விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final: போலி நம்பிக்கையில் இருக்கக் கூடாது-ஹர்பஜன் சிங் விமர்சனம்

WTC Final: போலி நம்பிக்கையில் இருக்கக் கூடாது-ஹர்பஜன் சிங் விமர்சனம்

Manigandan K T HT Tamil
Jun 12, 2023 05:25 PM IST

World Test Championships: 'இதுவொரு போலியான நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறது.'

இந்திய வீரர்கள் புஜாரா, ரோஹித், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்
இந்திய வீரர்கள் புஜாரா, ரோஹித், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில், விக்கெட்டுகள் மிகவும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்தன, மேலும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகள் 3 நாட்களில் முடிவடைந்தன.

ரவிச்சந்திரன் அஸ்வின் (25 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (22 விக்கெட்), நாதன் லயன் (22 விக்கெட்) ஆகியோர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பின்னர், ஆஸ்திரேலியா அனைத்து முக்கிய ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்றைப் படைத்தது.

இந்நிலையில், ஹர்பஜன் சிங் கூறியதாவது:

சுழற்பந்து வீச்சுக்கு உகந்த இந்திய ஆடுகளங்களில் வெறும் மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டிகளை முடிப்பதன் மூலம், இந்தியா பெரிய போட்டிகளுக்கு தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறது. இதுவொரு போலியான நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறது. இந்திய வீரர்கள் 5 நாட்களும் கடினமாக உழைக்க வேண்டும், அதை தங்கள் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதற்கு காரணமாக மேமூட்டமாக இருக்கும் சூழ்நிலையை சாதமாக்கி கொள்ள முயற்சிப்பதாக அப்போதைய கேப்டன் கங்குலி தெரிவித்து இருந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியான அதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. இந்திய பவுலர்கள் மீது ஆஸ்திரிலியா பேட்ஸ்மேன்கள் முழுமையான ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தியா 234 ரன்களில் சுருண்டது. ஆஸி., 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

அதேபோன்று இன்றும் நடந்துவிட்டது. ரோஹித் சர்மா, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்ததால் ஆட்டத்தின்போக்கு மாறிவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தோல்வியைத் தழுவிய பிறகு பேசிய ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து கூறினார். மேலும், நாங்கள் நன்றாக செயல்பட்டோம். பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்துவிட்டோம் என்றார்.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி வென்றது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓவலில் நடந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா வென்றது.

இந்தியாவுடனான பைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ஆஸ்திரேலியா.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.