Cricket World Cup 2023: 'உலகக் கோப்பை போட்டிக்கு திருவனந்தபுரம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை?'
இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2019 உலகக் கோப்பை ரன்னர்-அப் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியானது.
முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது.
முதலாவது ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2019 உலகக் கோப்பை ரன்னர்-அப் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எத்தனை, இங்கு எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்பது போன்ற விவரங்களை பார்ப்போம் வாருங்கள்.
சென்னையில் அக்டோபர் 8ம் தேதி இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை வங்கதேசமும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்தும், ஆப்கனும் சென்னையில் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
46 நாட்கள் 48 போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகள் மொத்தம் 10 இடங்களில் நடக்கவுள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தேர்வு செய்யப்படாமல் போனது குறித்து கேரளத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
தென்னிந்தியாவில் பெங்களூர், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 10 நகரங்களில் தான் நடத்த திட்டமிடப்பட்டது. அதனால், தான் தென்னிந்தியா முழுவதையும் கவர் செய்ய முடியவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், செய்தியாளர்களிடம் திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், "உலகக் கோப்பை போட்டி நீண்ட நாட்கள் நடக்கும் போட்டி ஆகும். அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி படுத்தியிருக்க வேண்டும். திருவனந்தபுரம், மொஹாலி, ராஞ்சி ஆகிய நகரங்களிலும் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். பிசிசிஐயின் மிகப் பெரிய தவறு இது" என்று கூறியிருந்தார்.
டாபிக்ஸ்