Brian Lara: கோலியுடன் உரையாட செல்போன் அழைப்பை தவிர்த்த பிரையன் லாரா!-வீடியோ வைரல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Brian Lara: கோலியுடன் உரையாட செல்போன் அழைப்பை தவிர்த்த பிரையன் லாரா!-வீடியோ வைரல்

Brian Lara: கோலியுடன் உரையாட செல்போன் அழைப்பை தவிர்த்த பிரையன் லாரா!-வீடியோ வைரல்

Manigandan K T HT Tamil
Jul 19, 2023 02:09 PM IST

Virat Kohli: அப்போது லாரா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும், கோலிக்காக செல்போனை புறக்கணித்துவிட்டு அவருடன் சில விநாடிகள் உரையாடினார்.

பிரைன் லாரா
பிரைன் லாரா (@bcci)

2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்தியாவுக்காக 500வது கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். இதன்மூலம், சச்சின், எம்.தோனி, டிராவிட் ஆகியோரின் வரிசையில் இடம்பிடிக்கிறார்.

12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் விராட் கோலி.

இந்நிலையில், டிரினிடட் மைதானத்தில் அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போடி ரன்னிங்கில் ஈடுபட்டிருந்தார் விராட் கோலி.

அப்போது முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் லெஜெண்ட் பிரைன் லாராவை அவர் சந்தித்தார். அப்போது லாரா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும், கோலிக்காக செல்போனை புறக்கணித்துவிட்டு அவருடன் சில விநாடிகள் உரையாடினார்.

இருவரும் புன்னகையுடன் சில விநாடிகள் பேசினர். அதைத் தெடார்ந்து லாரா செல்போனில் பேசுவதைத் தொடர்ந்தார். கோலி, படியேறி அறைக்குச் சென்றார்.

முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் கர்ஃபீல்டு சோபர்ஸை விராட் கோலி சந்தித்து உரையாடினார்.

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஸ்கோர் பதிவு செய்த கிரிக்கெட் வீரராக இருந்த லாராவின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் கோலி. இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கரும், லாராவும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், மற்ற இந்திய வீரர்களையும் லாராவை சந்தித்து கைலுக்கு மகிழ்ந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.