HT Sports Special: சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய உலகின் உயரமான பவுலர்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய உலகின் உயரமான பவுலர்!

HT Sports Special: சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய உலகின் உயரமான பவுலர்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 05, 2023 06:05 AM IST

உலக கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற உலகின் உயரமான பவுலர் என்ற பெருமைக்குரியவராக உள்ளார் பாய்ட் ராங்கின்.

உலகின் உயரமான பவுலர் என்ற பெருமைக்குரிய பாய்ட் ராங்கின்
உலகின் உயரமான பவுலர் என்ற பெருமைக்குரிய பாய்ட் ராங்கின்

முதல் முறையாக 2007 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அயர்லாந்து அணியில் இடம்பிடித்த பிரதான பவுலர்களில் ஒருவராக இருந்தார் பாய்ட் ராங்கின். ஜாம்பவான் பவுலர்களான வெஸ்ட் இண்டீஸின் அம்ரோஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ராத் ஆகியோரின் பவுலிங் ஆக்‌ஷன்களை கலந்து வித்தியாசமாக இருக்கும் இவரது பவுலிங் ஸ்டைல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன் 6 அடி 8 அங்குலம் என உலகின் மிக உயரமான பவுலர்களில் ஒருவராக திகழ்ந்த ராங்கின், உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார். இவர் 9 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இவர், யுனுஸ் கானை டக்அவுட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அயர்லாந்து அணிக்காக 2006 முதல் 2013 வரை கிரிக்கெட் விளையாடிய இவர், பின்னர் அங்கிருந்து விலகி இங்கிலாந்து அணியில் இணைந்தார். அந்த அணிக்காகவும் சில போட்டிகளில் பங்கேற்ற அவர் சிறப்பான ஆட்டத்தை வெலிப்படுத்தினர். இங்கிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். 2013-14 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் மீண்டும் அயர்லாந்து அணியில் இணைந்த ராங்கின், 2016 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். இதன் மூலம் அயர்லாந்து அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்ற வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

அத்துடன் 2018இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அயர்லாந்து விளையாடிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களில் ஒருவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அயர்லாந்துக்காக 2020 சீசனில் முழு நேர வீரருக்கான ஒப்பந்தத்தை பெற்ற முதல் வீரராக இருந்து வந்த ராங்கின், 2021இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ராங்கின் 3 டெஸ்ட் 8 விக்கெட்டுகள், 75 ஒரு நாள் போட்டி 106 விக்கெட்டுகள், 50 டி20 போட்டி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பவுலராக திகழ்ந்த இவர் 108 முதல் தர போட்டிகளில் 352 விக்கெட்டுகளும், 140 லிஸ்ட் ஏ போட்டிகளில் 184 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதுதவிர 97 உள்ளூர் லீக் டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

தரமான பவுலர், உயரமான சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றவரான பாய்ட் ராங்கின் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.