BCCI: உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியை தேர்வு செய்த பிசிசிஐ - யாருக்கெல்லாம் வாய்ப்பு?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியை தேர்வு செய்த பிசிசிஐ - யாருக்கெல்லாம் வாய்ப்பு?

BCCI: உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியை தேர்வு செய்த பிசிசிஐ - யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2023 01:55 PM IST

ஒரு நாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கான உத்தேச அணியை பிசிசிஐ-யை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் இருந்துதான் மெயின் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் (AP)

இதையடுத்து 20 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய உத்தேச அணியில் ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்ப்ர் பேட்ஸ்மேன்கள், நான்கு பவுலிங் ஆல்ரவுண்டர்கள். இரண்டு ஸ்பின்னர்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் என இடம்பிடித்துள்ளனர்.

இந்திய உத்தேச அணி விவரம் பின்வருமாறு: ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார்

இதில் பேட்ஸ்மேன்களாக ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளார்கள்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் உள்ளார்கள்

பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட் ஆகியோரும், ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் உள்ளார்கள்.

இந்த பட்டியலில் இருக்கும் வீரர்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் காயத்தின் தன்மை பொறுத்து அவர்கள் இந்திய மெயின் அணியில் எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் உத்தேச அணியில் இருந்து 15 பேர் மட்டுமே மெயின் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.