BCCI: பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்: புவனேஷ் நீக்கம்.. யாருக்கு எத்தனை கோடி சம்பளம்?
ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம்
இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவுக்கு என்ன சம்பளம்?
ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ ப்ளஸ் பிரிவில் யார் யார்?
- கேப்டன் ரோஹித் சர்மா
- முன்னாள் கேப்டன் கோலி
- ஜஸ்பிரித் பூம்ரா
- ரவீந்திர ஜடேஜா
ஏ பிரிவில் யார் யார்?
- ஹர்த்திக் பாண்ட்யா
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- முகமது ஷமி
- ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்
- அக்சர் படேல்
பி பிரிவில் யார்? யார்?
- புஜாரா
- கே.எல்.ராகுல்
- ஷ்ரேயஸ் ஐயர்
- முகமது சிராஜ்
- சூர்யகுமார் யாதவ்
- சுப்மன் கில்
சி பிரிவில் யார்? யார்?
- உமேஷ் யாதவ்
- ஷிகர் தவான்
- ஷர்துல் தாகூர்
- இஷான் கிஷன்
- தீபக் ஹூடா
- யுஸ்வேந்திர சாஹல்
- குல்தீப் யாதவ்
- வாஷிங்டன் சுந்தர்
- சஞ்சு சாம்சன்
- அர்ஷ்தீப் சிங்
- கே.எஸ்.பரத்
ஆகிய வீரர்கள் முறையே நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புவனேஷ்குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் காயத்தில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்