Womens Asia cup 2022: மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணி, அட்டவணை அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Womens Asia Cup 2022: மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணி, அட்டவணை அறிவிப்பு

Womens Asia cup 2022: மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணி, அட்டவணை அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2022 06:56 PM IST

மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது

<p>மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு&nbsp;</p>
<p>மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு&nbsp;</p>

அனைத்து அணிகளும் ரவுண்ட்ராபின் முறையில் மோதிக்கொண்டு அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பின்னர் அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதியில் மோதும் விதமாக அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து அக். 3 மலோசியா, அக். 4 ஐக்கிய அரபு அமீரகம், அக். 7 பாகிஸ்தான், அக்.8 வங்கதேசம் , அக். 10 தாய்லாந்து ஆகிய அணிகளுடன் மோதுகின்றன.

ரவுண்ட் ராபின் ஆட்டங்கள் அக்டோபர் 11ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அரையிறுதி அக். 13 மற்றும் இறுதிப்போட்டி அக். 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் விவரம்: ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருத்தி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்நேக் ராண, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், பூஜா வஸ்த்ராக்கர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கேபி நவ்கிரே

காத்திருப்பு வீராங்கனைகள்: தனியா சப்னா பாட்யா, சிம்ரன் தில் பகதூர்

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.