BCCI: தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் இந்தியா! எங்கே?எப்போது? - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் இந்தியா! எங்கே?எப்போது? - முழு விவரம்

BCCI: தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் இந்தியா! எங்கே?எப்போது? - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 15, 2023 12:25 PM IST

ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட், டி20, ஒரு நாள் என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுகிறது.

தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் இந்தியா
தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் இந்தியா

முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடுகிறது. பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட காந்தி மண்டேலா கோப்பை நடக்கிறது.

இதில் முதல் டி20 போட்டி டிசம்பர் 10 டர்பனிலும், இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12ஆம் தேதி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 14 ஜோகன்னஸ்பெர்கிலும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 முதல் ஒருநாள் ஜோகன்னஸ்பெர்க், டிசம்பர் 19 இரண்டாவது ஒருநாள் க்கெபெர்ஹா, மூன்றாவது ஒரு நாள் டிசம்பர் 21 பார்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2023-25க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெற்றிருக்கும் காந்தி - மண்டேலா டெஸ்ட் தொடர் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாகவும், புத்தாண்டு டெஸ்ட் போட்டியாகவும் அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 - 30 வரை சென்சுரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7 வரை கேப்டவுனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் நடைபெறும் டி20 போட்டிகள், அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சியாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.