Netherland Cricket Team: உலக கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணிக்கு கிடைத்த தனிபெருமை! தந்தை விட்ட இடத்தை நிரப்பும் மகன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Netherland Cricket Team: உலக கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணிக்கு கிடைத்த தனிபெருமை! தந்தை விட்ட இடத்தை நிரப்பும் மகன்

Netherland Cricket Team: உலக கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணிக்கு கிடைத்த தனிபெருமை! தந்தை விட்ட இடத்தை நிரப்பும் மகன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 08, 2023 05:17 PM IST

உலக கோப்பை போட்டிகளில் தந்தை, மகன் விளையாடிய கிரிக்கெட் அணிகளில் தற்போது நெதர்லாந்தும் இணைகிறது. அத்துடன் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற அரிதான சாதனை நிகழ்த்தும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நெதர்லாந்து ஆல்ரவுண்டர் பாஸ் டீ லீட்.

நெதர்லாந்து அணியில் முன்னாள் வீரர் டிம் டி லீட்  மற்றும் அவரது மகன் பாஸ் டி லீட்
நெதர்லாந்து அணியில் முன்னாள் வீரர் டிம் டி லீட் மற்றும் அவரது மகன் பாஸ் டி லீட்

வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. இந்த அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறு முக்கிய பங்கு ஆற்றிய வீரராக ஆல்ரவுண்டர் பாஸ் டீ லீட் உள்ளார்.

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நிலையில், அந்த போட்டியில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 92 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் பாஸ் டீ லீட். இதன் மூலம் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் 100 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற அரிய சாதனை புரிந்தார்.

அத்துடன், மற்றொரு சிறப்பம்சமாக நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் தந்தை மற்றும் மகன் இருவரும் உலக கோப்பை போட்டிகள் விளையாடும் பெருமையை பெறவுள்ளனர். நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வரும் பாஸ் டி லீட், அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிம் டி லீட் மகன் ஆவார்.

இவர் இதற்கு முன்னர் நெதர்லாந்து அணி விளையாடிய நான்கு உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தற்போது அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், டிம் டி லீட் மகன் பாஸ் டி லீட், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறார்.

முன்னதாக, டிம் டி லீட் 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை அவுட்டாக்கினார். இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், சிறப்பான பந்துவீச்சுக்காக டிம் டி லீட் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிம் டி லீட் போன்று முக்கியமான வீரராக உருவெடுத்திருக்கும் பாஸ் டி லீட் எதிர்வரும் உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளார்.

உலக கோப்பை பேட்டிகளில் தந்தை, மகன் விளையாடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் ஆறு முறை இதே போன்ற நிகழ்வு நடந்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 1983ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னி 2015ஆம் ஆண்டு உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார் .

ஆஸ்திரேலியா அணியின் ஜெஃப் மார்ஸ் 1987ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரது மகன்கள் ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் விளையாடினர்.

இங்கிலாந்து அணி வீரர்களான டாம் கரன், சாம் கரன் ஆகியோரின் தந்தையான கெவின் கரன் 1983 மற்றும் 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.