தமிழ் செய்திகள்  /  Sports  /  Bangladesh Women Vs India Women 2nd T20i Result

INDW vs BANW: ஷஃபாலி வர்மா அபார பந்துவீச்சு-டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Manigandan K T HT Tamil
Jul 11, 2023 05:32 PM IST

முதலில் பேட்டிங் செய்த இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஷஃபாலி வர்மா, இந்திய கேப்டன் கவுர், வங்கதேச கேப்டன் நிகர்
ஷஃபாலி வர்மா, இந்திய கேப்டன் கவுர், வங்கதேச கேப்டன் நிகர் (@ICC)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் ஆட்டத்திலும் ஏற்கனவே வென்ற நிலையில், தற்போது 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

டாக்காவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஷஃபாலி வர்மா மட்டுமே 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

சுல்தானா கதுன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களில் சுருண்டது இந்தியா.

இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் விளையாடியது. ஆனால், அந்த அணியோ இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 87 ரன்களில் சுருண்டது.

கடைசி ஓவரில் ஷஃபாலி வர்மா 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

தீப்தி ஷர்மாவும் 3 விக்கெட்டுகளை சுருட்டி வெற்றிக்கு பங்களித்தார். மின்னு மணி 2 விக்கெட்டுகளையும் பரெட்டி அனுஷா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வங்கதேசம் தரப்பில் கேப்டன் நிகர் சுல்தானா 38 ரன்களை விளாசினார். எஞ்சிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

எளிதாக வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் தோற்றது வங்கதேசம். கடைசி டி20 ஆட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பிளேயர் ஆஃப் தி மேட்ச் ஆக தீப்தி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்