Ban vs Afg: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக பெரிய வெற்றி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது வங்கதேசம். ஆசிய மைதானங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இது அமைந்துள்ளது.
வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒரு நாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலாவதாக டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 382 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ அதிகபட்சமாக 146 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் பவுலர்களில் நிஜாத் மஸுத் 5 விக்கெட்டுகளை கைபற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஃப்சல் ஸஸாய் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். வங்கதேச பவுலர்களில் எபாடாட் ஹுசைன் 4, தைஜுல் இஸ்லாம், மெஹ்டி ஹசான் மிராஜ், ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் செய்யாத போதிலும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷாண்டோ, இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். 124 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். ஷாண்டோவுடன் இணைந்து மோமினுல் ஹக் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த சதமடித்தார். 121 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கேதச கேப்டனும் 66 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 425 என இருந்தபோது வங்கேதசம் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் மோசமாக பேட் ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் வங்கதேச அணி 536 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் ஆசிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது பெரிய வெற்றியாகவும் அமைந்தது.
இதற்கு முன்னர் 1928ஆம் ஆண்டில் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 675 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாக உள்ளது.
இதற்கு அடுத்து 6 ஆண்டுகள் கழித்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
வங்கதேச பவுலர்களில் டஸ்கின் அகமத் 4, ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரண்டு இன்னிங்ஸும் சேர்த்து ஆப்கானிஸ்தான் அணி முழுவதுமாக 90 ஓவர்கள் கூட பேட் செய்யவில்லை.
ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேசம் அணி வென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்