Badminton Asia Team Championship: காலிறுதியில் ஹாங்காக்குக்கு எதிராக வெற்றி! பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Badminton Asia Team Championship: காலிறுதியில் ஹாங்காக்குக்கு எதிராக வெற்றி! பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி

Badminton Asia Team Championship: காலிறுதியில் ஹாங்காக்குக்கு எதிராக வெற்றி! பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 16, 2024 05:46 PM IST

சீனா டாப் சீட் வீராங்கனைகள் அடங்கிய அணியை வீழ்த்திய பின்னர், காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

காயத்துக்கு பின்னர் கம்பேக் கொடுத்த பிவி சிந்து
காயத்துக்கு பின்னர் கம்பேக் கொடுத்த பிவி சிந்து

இதையடுத்து இந்த தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. குரூப் பிரிவு போட்டியில் டாப் சீட் வீராங்கனைகளை கொண்ட சீனாவை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் ஒலிம்பிக் வெற்றியாளர் பிவி சிந்து, அஷ்மிதா சாலிஹா ஆகியோரும், இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஆகியோர் உள்ளார்கள்.

காயத்தில் இருந்து மீண்ட பின்னர் மீண்டும் பேட்மிண்டன் விளையாட்டுக்கு திரும்பியிருக்கும் பிவி சிந்து, லோ சின் யான் ஹாப்பி என்பவருக்கு எதிராக 21-7, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஆகியோர், உலக அளவில் 18வது ரேங்க் பெற்றிருக்கும் யுங் ங்கா டிங் மற்றும் யெங் புய் ஆகியோருக்கு எதிராக லாம் 21-10, 21-14 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.