HS Prannoy: ஆஸி., ஓபன் பேட்மின்டனில் பைனலுக்கு முன்னேறினார் பிரணாய்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hs Prannoy: ஆஸி., ஓபன் பேட்மின்டனில் பைனலுக்கு முன்னேறினார் பிரணாய்

HS Prannoy: ஆஸி., ஓபன் பேட்மின்டனில் பைனலுக்கு முன்னேறினார் பிரணாய்

Manigandan K T HT Tamil
Aug 05, 2023 05:54 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டனில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

எச்.எஸ்.பிரணாய்
எச்.எஸ்.பிரணாய் (@Media_SAI)

சக நாட்டவரான ரஜாவத்தை 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பிரணாய் வென்றார்.

ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டனில் 2வது முறை பைனலுக்கு முன்னேறியுள்ளார் பிரணாய். உலக தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள ரஜாவத்தை 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பிரணாய். 2023 பி.டபிள்யூ.எஃப் சீசனில் தனது இரண்டாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அகில இந்திய அளவிலான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பிரணாய், ராஜாவத் மோதினர். போட்டி முன்னேறும் போது, இந்திய பேட்மிண்டன் வீரர்கள் இருவரும் போட்டி போட்டு வெற்றி பெற்றனர்.

ஸ்கோர் 18-ஆல் என சமநிலையில் இருந்த நிலையில், பிரணாய் தொடர்ந்து 3 புள்ளிகள் பெற்று போட்டியில் முன்னிலை பெற்றார். இரண்டாவது கேமில் பிரணாய் 7-3 என முன்னிலை பெற்றார். மறுபுறம், ராஜாவத் தொடர்ந்து நான்கு புள்ளிகளை வென்று ஆட்டத்தை 7-ஆல் என சமன் செய்தார்.

31 வயதான பிரணாய் தனது ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி 11-7 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். 43 நிமிடங்களில் நடந்த இப்போட்டியில் ராஜாவத்தை வீழ்த்தி பிரணாய் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

பைனலில் சீனாவின் எச்.வெங்கை நாளை காலை 9.30 மணிக்கு எதிர்கொள்கிறார் பிரணாய்.

பிரணாய் ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறுகிறார். மே 2023 இல் உலக தரவரிசையில் 7 வது இடத்தைப் பெற்றுள்ளார். 2010இல் இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர் பிரணாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.