Asian Kabaddi Championship: ஆரம்பமே அமர்க்களம்.. ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி
அடுத்த இடத்தில் 5 புள்ளிகளுடன் ஜப்பானும், 3வது இடத்திலும் 5 புள்ளிகளுடன் ஈரானும் உள்ளது.
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளே 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. தமிழக மண்ணுடன் அதிகம் தொடர்புடையது கபடி விளையாட்டு. இது இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
தற்போது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சைனீஸ் தைபேவும் ஈரானும் மோதின. இதில் ஈரான் வெற்றி பெற்றது. ஈரான் 52-28 என்ற புள்ளிக் கணக்கிலை வாகை சூடியது.
இதையடுத்து, தனது முதல் போட்டியில் தென் கொரியாவை சந்தித்தது இந்தியா.
பரபரப்பாக நடந்த முதல் போட்டியில் இந்தியா 76-13 என்ற புள்ளிக் கணக்கில் அசத்தலாக வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ஜப்பான், ஹாங் காங் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஜப்பான் 85-11 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
பின்னர் மதியம் 12.30 மணிக்கு சைனீஸ் தைபே-இந்தியா அணிகள் மோதின. இந்தியா முதல் நாளிலேயே 2 ஆட்டங்களில் விளையாடியது.
இந்த ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 53-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்வாறாக இந்தியா 2 போட்டிகளில் வென்று 10 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது.
அடுத்த இடத்தில் 5 புள்ளிகளுடன் ஜப்பானும், 3வது இடத்திலும் 5 புள்ளிகளுடன் ஈரானும் உள்ளது.
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியாவில் இன்று தொடங்கியுள்ளது. 11வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை.
இந்த தொடரில் இந்தியா, ஈரான், தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், தைவான் அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணிக்கு சுனில் குமார் கேப்டனாக உள்ளார். இந்த முறை பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை.
ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை நான்கு நாள்கள் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
நாளை ஹாங் காங்-ஈரான், தென்கொரியா-ஜப்பான், சைனீஸ் தைபே-ஜப்பான், சைனீஸ் தைபே-ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை 11th Asian Men's Kabaddi Championship என்ற யூடியூப் பக்கத்தில் நேரலையாக கண்டு ரசிக்கலாம்.
இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் 10 தொடர்களில் இந்திய அணி 7 முறை தங்கம் வென்று, வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்