Asian Games Volleyball: கம்போடியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
கம்போடியா அணிக்கு எதிராக முழுமையான ஆதிக்கம் செலுத்திய இந்திய ஆண்கள் வாலிபால் அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய வெற்றியுடன் ஆசிய விளையாட்டு போட்டியை தொடங்கியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளன. தொடக்க விழாவுக்கு முன்னரே கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் உள்பட சில விளையாட்டு போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளன.
இதையடுத்து ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் குரூப் சி பிரிவில் இந்தியா - கம்போடியா அணிகள் மோதின. இதில் 25 -14, 25 -13, 25 -19 ஆகிய புள்ளிக்கணக்கில் கம்போடியா அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்தியா தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த தென் கொரியா அணியை இன்று சந்திக்கிறது.
ஆண்கள் வாலிபால் போட்டியில் மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இதில் டாப் அணிகளாக ஜப்பான், சீனா, தென் கொரியா என மூன்று அணிகள் உள்ளன. ஆசிய விளையாட்டை பொறுத்தவரை ஜப்பான் அணி 16 தங்கம் வென்று டான் அணியாக திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக சீனா 11, கொரியா 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 1958 முதல் வாலிபால் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த ஆண்டில் இந்தியா 3வது இடத்தை பிடித்தது. இதுவரை இந்தியா வாலிபால் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 1962ஆம் ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. 1958, 1986 ஆகிய ஆண்டுகளில் வெண்கலம் வென்றது.
இதன் பின்னர் 37 ஆண்டுகள் கழித்து இந்த முறை பதக்கத்தை தட்டி தூக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்