Asian Games Boxing: ஆசிய கேம்ஸ் குத்துச்சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Boxing: ஆசிய கேம்ஸ் குத்துச்சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை!

Asian Games Boxing: ஆசிய கேம்ஸ் குத்துச்சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை!

Manigandan K T HT Tamil
Sep 29, 2023 03:52 PM IST

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடா காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா (@ddsportschannel)

போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் பர்வீன் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் சூ ஜிச்சுன் பதிலடி கொடுத்தார், ஆனால் நடுவர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண்ணை 23 வயதான இந்திய குத்துச்சண்டை வீரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடா காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் பர்வீன் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் சூ ஜிச்சுன் பதிலடி கொடுத்தார், ஆனால் நடுவர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண்ணை 23 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனைக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.

அவர் மூன்று சுற்றுகளிலும் அற்புதமான Footwork ஐ செய்தார். தனக்கும் தனது எதிராளிக்கும் இடையில் நிலையான தூரத்தை மெயின்டெயின் செய்தார்.

அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சிதோரா டர்டிபெகோவாவை எதிர்கொள்கிறார் பர்வீன்.

ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் லக்ஷ்யா சாஹர் 4:1 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் ஓமுர்பெக் பெக்ஜிகிட் உலுவிடம் தோல்வியடைந்தார்.

ஹாங்சோவில் ஒலிம்பிக் எடைப் பிரிவில் போட்டியிட்டபோது, சாஹரால் இந்தியாவுக்கான பாரிஸ் 2024 ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முடியவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.