Asian Games Archery: 'வச்ச குறி தப்பாது'-வில்வித்தையில் இந்தியா அசத்தல் தொடக்கம்
அதிதி கோபிசந்த் சுவாமி 50 10 மற்றும் 14 எக்ஸ் மதிப்பெண்கள் பெற்று 696 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை போட்டியின் மகளிர் காம்பவுண்ட் தகுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான ஜோதி சுரேகா வெண்ணம் முதலிடத்தைப் பிடித்தார்.
வில்வித்தை போட்டியின் முதல் நாளில் ஜோதி 57 10, 34 எக்ஸ் உட்பட 704 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதிதி கோபிசந்த் சுவாமி 50 10 மற்றும் 14 எக்ஸ் மதிப்பெண்கள் பெற்று 696 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். பர்னீத் கவுர் 43 10 மற்றும் 18 எக்ஸ் என மொத்தம் 687 புள்ளிகளுடன் 12-வது இடத்துக்கு தகுதி பெற்றார். அவ்னீத் கவுர் 685 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளார். மகளிர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா 2087 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ரிகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவில் வில்வித்தை வீரர் அதானு தாஸ் 678 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தீரஜ் பொம்மதேவரா 675 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி 3-வது இடத்தைப் பிடித்தது.
ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில்வித்தை வீரர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வென்றனர், ஒன்று ஆண்கள் காம்பவுண்ட் அணியிலும் மற்றொன்று பெண்கள் காம்பவுண்ட் குழு போட்டியிலும் வென்றது, தற்போதைய அணி 2023 ஆம் ஆண்டில் ஹாங்சோவில் அந்த எண்ணிக்கையை மேம்படுத்த முயற்சிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்