Asian Games: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி
இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்விகளை தழுவியதால் ரோஷிபின்னா வெள்ளி வென்றுள்ளார்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் திருவிழாவில் இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்று நடைபெறும் ஐந்தாவது நாள் ஆசிய விளையாட்டு போட்டியில் வுசூ விளையாட்டில் மகளிர் 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்விகளை தழுவியதால் ரோஷிபின்னா வெள்ளி வென்றுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கிய விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் பதக்கங்களை வென்று மொத்தம் 23 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பதக்க பட்டியலில் வென்று முதல் இடத்தில் சீனா தொடர்ந்து நீடிக்கிறது. கொரிய இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்