Asian games 2023: படகு போட்டியில் வெள்ளி வென்ற இளம் வீராங்கனை நேகா தாக்கூர்
பெண்கள் பங்கேற்கும் ஐஎல்சிஎல்-4 வகை போட்டிகளில் மொத்தம் 11 ரேஸ்கள் உள்ளன. இதில் 32 புள்ளிகளுடன் முடித்திருக்கும் இந்தியாவின் நேகா தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கிய விளையாட்டு போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
40 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று சீனா முதல் இடத்திலும், 36 பதக்கங்களுடன் கொரிய இரண்டாவது இடத்திலும், 31 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது.
இதையடுத்து சிறுமிகளுக்கு நடைபெறும் ஐஎல்சிஏ - 4 வகையிலான படகு போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை நேகா தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மூன்றாவது நாளில் சீனாவில் நிங்போவில் படகுபோட்டி நடைபெற்று.
இதில், இந்தியாவில் போபாலில் உள்ள தேசிய படகு பள்ளியை சேர்ந்த வளர்ந்து வரும் வீராங்கனையான நேகா 32 புள்ளிகளை பெற்றார். ஆனால் அவரது நிகர புள்ளி 27 என இருந்தது. தங்கம் வென்ற தாய்லாந்து வீராங்கனை நோப்பசோர்ன் குன்பூஞ்சன் என்பவரை விட குறைவாக இருந்தது. இதனால் இரண்டாம் இடத்தை பிடித்த நேகா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
மூன்றாவது இடத்தை சிங்கப்பூரை சேர்ந்த கீரா மேரி கார்லைல் வென்று, வெண்கல பதக்கத்தை வென்றார்.
படகு போட்டியில், சக போட்டியாளர்களிடம் மோதிய அனைத்து பந்தயங்களில் இருந்தும் போட்டியாளரின் மோசமான மதிப்பெண் மொத்த மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்பட்டு, நிகர மதிப்பெண் தீர்மானிக்கப்படும்.
அந்த வகையில் ஐஎல்சிஎல்-4 வகை போட்டிகளில் மொத்தம் 11 ரேஸ்கள் உள்ளன. இதில் நேகா 32 புள்ளிகளை பெற்றார். நேகாவின் மோசமான ரேஸாக 5வது ரேஸ் இருந்தது. அதில் அவர் வெறும் 5 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இந்த புள்ளிகள் மொத்த புள்ளிகளுடன் கழித்த பிறகு நிகர புள்ளிகளாக அவர் 27 மட்டும் எடுத்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்