Asian Games 2023: வங்கதேச அணிக்கு எதிராக கோல் மழை! அரையிறுதியில் இந்தியா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games 2023: வங்கதேச அணிக்கு எதிராக கோல் மழை! அரையிறுதியில் இந்தியா

Asian Games 2023: வங்கதேச அணிக்கு எதிராக கோல் மழை! அரையிறுதியில் இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 02, 2023 05:50 PM IST

ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் குரூப் பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஹாக்கி அணி வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஹாக்கி அணி வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி

இதையடுத்து இந்திய ஹாக்கி அணி வங்கேதசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் ஹாக்கி போட்டியில் கலக்கி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளில் இரட்டை இலக்க கோல்களை அடித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 12-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய முதல் பாதியில் இந்திய கேப்டன் ஹர்மண்ப்ரீத் சிங் கிடைத்த இரண்டு பெணால்டி கார்னர் வாய்ப்பை கோல் ஆக்கினார்.

இதன்பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மண்தீப் சிங் அணிக்கு அடுத்த இரண்டு கோல்களை பெற்று தந்தார். அவரை தொடர்ந்து அமித் ரோஹிதாஸ், லலித் உபத்யா ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்த 6-0 என இந்தியா முன்னிலை வகித்தது.

மூன்றாவது பாதியில், ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் பெனால்டி கார்னரை கோலாக மாற்றி ஹாட்ரிக் கோல் அடித்தார் ஹர்மன்ப்ரீத் சிங். இதன் பின்னர் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் அபிஷேக் தனது இரண்டாது கோல் அடித்தார். இந்தியா இந்தியா 8 கோல்களை பெற்றது.

ஹர்மன்ப்ரீத் சிங்கை போல் மண்தீப் சிங் நான்காவது பாதியில் கோல் அடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் ஐந்தாவது பாதியில் நில்கந்தா ஷர்மா, சுமித் ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஹர்மன்ப்ரீத் 2,4,32 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்தார். மண்தீப் சிங் 18,24, 46 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.

லலித்குமார் உபத்யா 23, அமித் ரோஹிதாஸ் 28, அபிஷேக் 41,57, நில்கந்தா ஷர்மா 47, சுமித் 56 ஆகிய நிமிடங்களில் கோல்களை அடித்தனர்.

இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.