Asian Champions Trophy Hockey: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சின்னம் -'பொம்மன்' பொம்மையை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான சின்னமாக பொம்மன் பொம்மையை தமிழ்நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த ஆண்டில் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் வென்ற தி எலிபேண்ட் விஸ்பரெர்ஸ் படத்தில் இடம்பிடித்த பொம்மன் - பெல்லி தம்பதிகளை இன்ஸ்பிரேஷனாக வைத்து பொம்மன் என்ற பெயரில் பொம்மை சின்னத்தை உருவாக்கியுள்ளனர். இந்த பொம்மன் சின்னம் அறிமுக நிகழ்ச்சியில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஹாக்கி இந்தியா பொதுசெயலாளர் திலிப் திர்கே உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "ஆசிய சாம்பியின்ஸ் டிராபி தொடர் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், பொம்மன் சின்னத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன். முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் பெல்லி தம்பதியினரால் ஈர்க்கப்பட்டு, இந்த பொம்மை சின்னத்தை உருவாக்கி பொம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அந்த தம்பதியினரின் பணிகளை போற்றும் வகையிலும், அவர்களின் சேவைக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கும் பொம்மன் பொம்மை சின்னம், மிகப் பெரிய ஆசிய யானையின் உருவமாக அமைந்துள்ளது. இதன் மூலம் வீரர்களின் வலிமை, புத்திசாலித்தனம், குழுப்பணி ஆகியவற்றை பிரதிபலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைக்கு மஞ்சள் சிவ கலந்த நிறத்தில் பனியன், சிவப்பு நிறத்தில் டவுசர் அணிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா என ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் போட்டிகள் 16 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகிறது.
இந்த ஹாக்கி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. டிக்கெட் விலையானது ரூ. 300, ரூ. 400 என விற்கப்படுகிறது. ஹாக்கி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை https://in.ticketgenie.in என்ற இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்