Asian Champions Trophy 2023: இந்தியா ஹாட்ரிக் வெற்றி-அரையிறுதிக்கும் தகுதி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Champions Trophy 2023: இந்தியா ஹாட்ரிக் வெற்றி-அரையிறுதிக்கும் தகுதி

Asian Champions Trophy 2023: இந்தியா ஹாட்ரிக் வெற்றி-அரையிறுதிக்கும் தகுதி

Manigandan K T HT Tamil
Aug 08, 2023 09:53 AM IST

Hockey: 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும்.

கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி.
கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி. (@DilipTirkey)

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இப்போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் இந்திய அணி, கொரியாவை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3 கோல்களை பதிவு செய்தது. நடப்பு சாம்பியனான கொரியா 2 கோல்களை மட்டுமே பதிவு செய்தது.

இந்திய அணி சார்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மன்ப்ரீத் சிங் ஆகிேயார் கோல் பதிவு செய்தனர்.

இதையடுத்து, தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பதிவு செய்தது இந்தியா. நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது. 3 வெற்றி, 1 டிரா உடன் 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முதல் தோல்வியை சந்தித்த கொரியா, அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய தினம் ஓய்வு நாளாகும். அடுத்து நாளை இரவு 8.30 மணிக்கு பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

அதேநாளில், ஜப்பான்-சீனா மோதும் ஆட்டம் முதலிலும், மலேசியா-கொரியா மோதும் மற்றொரு ஆட்டம் அடுத்தும் நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.