Asian Atheletics Championship: நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கருக்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் நான்காவது நாளான நேற்று இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்களுக்ககான நீளம் தாண்டுதல் விளையாட்டில் முரளி ஸ்ரீஷங்கர் வெள்ளிப்பதக்க்தை வென்றுள்ளார். அத்துடன். 2024ஆம் ஆண்டில் பாரிசில் நடைபெறும் ஓலிம்பிக் போட்டியிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இதே போன்று ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஷ்ரா, அமோஷ் ஜகோப் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் கொண்ட கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
ஆண்களுக்கான 400 மீ தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் போட்டி இலக்கை 49.09 வினாடிகளில் கடந்துள்ளார்.
முதல் நாள் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரரான அபிஷேக் பால் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இரண்டாவது நாளில் இந்திய வீராங்கனை ஜோதி பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோல இந்திய வீரரான அப்துல்லா ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அஜய் குமார் சரோஜ் என்பவரும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார்.
தற்போது வரையில் ஜப்பான் 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்திலும், சீனா 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கத்துடன் 17 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி 3ஆவது இடத்திலும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்