Asia cup 2022: த்ரில் வெற்றியால் சூப்பர் 4 சுற்றில் இலங்கை!வங்கதேசம் வெளியேற்றம்
கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் கடுப்படுத்தினால் போதும் என்ற நிலையில் வெற்றியை இலங்கை அணிக்கு தாரைவார்த்துக்கொடுத்தனர் வங்கதேச பெளலர்கள். இறுதியில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை சூப்பர் 4 சுற்றின் தகுதி பெற. வங்கதேசம் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி வங்கதேசம் - இலங்கை இடையே துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவே அமைந்திருந்தது.
இந்தியா - ஹாங்காங் விளையாடிய ஆடுகளம் போன்று பேட்டிங்குக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கும் பிட்சில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனக பந்து வீச்சை தேர்வு செய்து ஆச்சர்யம் அளித்தார்.
வங்கதேச அணியில் ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறும் ரன் குவிப்பும் எந்த தடங்களும் இல்லாமல் நிகழ்ந்தது. குறிப்பட்ட தனி பேட்ஸ்மேன் என்று நிலைத்து ஆடாமல், தங்களால் முடிந்த பங்களிப்பை ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஃபிஃப் ஹொசைன் 39, ஓபனிங் பேட்டர் 38 ரன்கள் குவிக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் என்று சவாலான இலக்கை நிர்ணயித்தினர்.
ஆனால் இந்த இலக்கை விரட்டும் இலங்கை பேட்ஸ்மேன்களை பெளலிங்கில் கட்டுப்படுத்த வங்கதேச பெளலர்கள் தவறினர். பவர்ப்ளே ஓவர்களில் நல்ல தொடக்கத்தை இலங்கை பேட்ஸ்மேன்கள் அமைத்தனர். இதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
இப்படியான ஒரு சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள வங்கதேச பெளலர்கள் தவறினர். தொடக்க பேட்ஸ்மேன் குசால் மென்டீஸ் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருடன் கேப்டன் தசுன் ஷனக இணைந்து கைகொடுத்தார். விக்கெட் வீழ்ச்சியால் குறைந்த ரன்ரேட்டை இருவரும் சேர்ந்து மீட்டனர்.
இதனால் ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. அரைசதம் விளாசிவிட்ட ஆட்டத்தின் 15வது ஓவரில் குசால் மென்டீஸ் 60 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். அவர் போன பின்னர் கேப்டன் ஷனக அதிரடி மோடுக்கு மாறினார்.
கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் இலங்கை அணிக்கு தேவைப்பட்டது. வங்கதேச அணிக்கு இந்த ரன்களை கட்டுப்படுத்த வேண்டும், அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அறிமுக வீரர் எபடோட் ஹொசைன் அந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்களை விட்டுக்கொடுத்து
வங்கதேசம் அணி வசம் இருந்த வெற்றி வாய்ப்பை அப்படியே இலங்கை பக்கத்துக்கு சாதமாக காரணமானார்.
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 பந்துகளில் ஆட்டத்தை முடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றதோடு, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சுற்றில் ஆப்கானிஸ்தான், இலங்கை என இரண்டு அணிகளுக்கும் எதிராக விளையாடிய போட்டிகளில் தோல்வி கண்ட வங்கதேசம் முதல ஆளாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
அணியின் வெற்றிக்கு பொறுப்பான பேட்டிங் மூலம் வித்திட்ட குசால் மென்டீஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடைசி லீக் ஆட்டம் ஹாங்காங் - பாகிஸ்தான் இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.